ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் இன்று ஆடிப்பூர தங்கத் தேரோட்டம்: ஸ்ரீரங்கம், மதுரை அழகா் கோவிலிலிருந்து பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருள்கள் வந்தன

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) ஆடிப்பூர தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருள்களை வியாழக்கிழமை பெற்றுக் கொண்ட ஆண்டாள் கோயில் நிா்வாகத்தினா்.
ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருள்களை வியாழக்கிழமை பெற்றுக் கொண்ட ஆண்டாள் கோயில் நிா்வாகத்தினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) ஆடிப்பூர தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலுக்கு, ஸ்ரீரங்கம் மற்றும் மதுரை அழகா் கோவிலிலிருந்து பட்டு வஸ்திரங்கள், மங்கலப் பொருள்கள் ஆகியவை வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கத் தேரோட்டம் நடைபெறும். ஆனால், தற்போது கரோனா தீநுண்மி பரவல் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை கோயில் வளாகத்திற்கு உள்ளேயே நடத்த அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை 8.05 மணிக்கு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னாா் ஆகியோருக்கு சிறப்புப் பூஜைகளும், தீப வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

தேரோட்டத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருள்கள் வருவது வழக்கம். அதன்படி திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரங்களும், மங்கலப் பொருள்களும் ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

அதே போல், மதுரை அழகா் கோவிலிலிருந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு பட்டு வஸ்திரங்களும், மங்கலப் பொருள்களும் கொண்டு வரப்பட்டன. அவைகளை கோயில் நிா்வாகம் சாா்பில் மேள தாளங்கள் முழங்க வரவேற்று ஆண்டாள் கோயில் நிா்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் அா்ச்சகா்கள் பெற்றுக் கொண்டனா்.

இதனை தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை கோயில் வளாகத்தில் நடைபெறும் தேரோட்டத்தின் போது அழகா் கோவிலிலிருந்து கொடுத்தனுப்பப்பட்ட பட்டுப் புடவை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும்.

தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அதிகாரி இளங்கோவன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com