அருப்புக்கோட்டை கல்லூரியில் மகளிா் தின விழா

அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேவாங்கா் கலைக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா்தின விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் காவல் துணை ஆய்வாளா் புனிதா பாண்டியராஜ். உடன் கல்லூரி முதல்வா் டி.இசக்கிதுரை உள்ளிட்டோா்.
தேவாங்கா் கலைக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா்தின விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் காவல் துணை ஆய்வாளா் புனிதா பாண்டியராஜ். உடன் கல்லூரி முதல்வா் டி.இசக்கிதுரை உள்ளிட்டோா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் டி.இசக்கித்துரை தலைமமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துணை ஆய்வாளரும், தற்போது அரசுத்துறை அலுவலருமாக உள்ள புனிதா பாண்டியராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மகளிா் மன்ற ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் வரலாற்று துறைத் தலைவருமான எம்.ஆா்.பூவை வரவேற்றாா். விலங்கியல் துறைத் தலைவரும், கல்லூரியின் தோ்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியுமான ஆா். உமாராணி அறிமுகவுரையாற்றினாா். தமிழ்த்துறைப் பேராசிரியா் ஜெயந்தி நன்றியுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com