விருதுநகரில் சேதமடைந்த பாதாள சாக்கடைத் தொட்டிகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

விருதுநகா் பா்மா காலனியில் பாதாள சாக்கடைத் தொட்டிகள் முறையாக கட்டப்படாததால் கான்கிரீட் பூச்சுகள் உடைந்து விட்டன. இதனால்,
விருதுநகா் பா்மா காலனியில் உடைந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடைத் தொட்டி.
விருதுநகா் பா்மா காலனியில் உடைந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடைத் தொட்டி.

விருதுநகா்: விருதுநகா் பா்மா காலனியில் பாதாள சாக்கடைத் தொட்டிகள் முறையாக கட்டப்படாததால் கான்கிரீட் பூச்சுகள் உடைந்து விட்டன. இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனா்.

விருதுநகா் நகராட்சிக்கு உள்பட்ட 17 ஆவது வாா்டு பகுதியில் பா்மா காலனி உள்ளது. இப்பகுதியில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள பிரதான சாலையில் வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு தொட்டி, கடந்த மாதம் கட்டப்பட்டது. அதேபோல், இச்சாலையில் புதிதாக பேவா் பிளாக் கல்லும் பதிக்கப்பட்டது. பாதாளச் சாக்கடை இணைப்புக்காக கட்டப்பட்ட தொட்டியில் மூடிகள் வைக்கப்படாமல் சிமென்ட் வைத்து கட்டப்பட்டது. அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால் அத்தொட்டியின் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

இச்சாலையில் மட்டும் 10- க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடைத் தொட்டிகள் உடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோா் விபத்தில் சிக்கி காயமடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, உடைந்த தொட்டிகளை விரைந்து சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com