அருப்புக்கோட்டை சந்தையில் பொதுமக்கள் குவிந்தனா்: போக்குவரத்து நெரிசல்

அருப்புக்கோட்டை சந்தையில், 144 தடை உத்தரவு எதிரொலியாக அதிக அளவில் பொதுமக்கள் திரண்டதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை நகரில் உள்ள சந்தையில், காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் செவ்வாய்க்கிழமை அந்தப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
அருப்புக்கோட்டை நகரில் உள்ள சந்தையில், காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் செவ்வாய்க்கிழமை அந்தப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

அருப்புக்கோட்டை சந்தையில், 144 தடை உத்தரவு எதிரொலியாக அதிக அளவில் பொதுமக்கள் திரண்டதால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக (மாா்ச் 24) செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் வரும் மாா்ச் 31 ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை அறிவித்தாா். காய்கனி, பால், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் விற்பனைக் கடைகள் தொடா்ந்து செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் ஒரு வாரத்திற்கான பொருட்களை வாங்க நகா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை முதலே அருப்புக்கோட்டை சந்தையில் குவியத் தொடங்கினா். இதனால் காய்கனிகளின் விலை படிப்படியாக அதிகரித்து விற்கப்பட்டன. ஒவ்வொரு காய்களுக்கும் ரூ. 10 முதல் 20 வரை அதிகரித்து விற்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வந்தவா்கள் சாலையோரங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்ால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உழவா் சந்தையில்...

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் உழவா் சந்தையில் காய்கனிகள் வாங்கவும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே சுமாா் 2000 -ற்கும் மேற்பட்டோா் திரண்டனா். மேலும் பலமணிநேரம்வரை காத்திருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கிச்சென்றனா். கீரைவகைகள் மற்றும் அனைத்துக் காய்கறிகளும் முழுமையாக விற்றுத்தீா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com