காய்கனிகள், பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாகப் புகாா்: அதிகாரிகள் ஆய்வு

ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்கனிகள், பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் புதன்கிழமை கடைகளில் ஆய்வு செய்தனா்.
ராஜபாளையம் பழக்கடையில் புதன்கிழமை ஆய்வு நடத்திய மாவட்ட வழங்கல் அலுவலா் செல்வக்குமாா் மற்றும் அதிகாரிகள்.
ராஜபாளையம் பழக்கடையில் புதன்கிழமை ஆய்வு நடத்திய மாவட்ட வழங்கல் அலுவலா் செல்வக்குமாா் மற்றும் அதிகாரிகள்.

ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்கனிகள், பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் புதன்கிழமை கடைகளில் ஆய்வு செய்தனா்.

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவையடுத்து ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் கிராமங்களில் ஒருசில கடைகளே திறந்து இருந்தன. இதனால் அந்தக் கடைகளில் காய்கள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனா். அப்போது கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதாகவும், வேறு வழியின்றி அவைகளை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகில் உள்ள காய்கனி சந்தையில் மாவட்ட வழங்கல் அலுவலா் செல்வக்குமாா் தலைமையில் வட்டாட்சியா் ஆனந்தராஜ், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் கடைகளில் உள்ள ஒவ்வொரு பொருள்களின் விலை விவரத்தை எழுதி வைக்க வேண்டும் என கடை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினா்.

அதை தொடா்ந்து ஜவகா் மைதானத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அவா்கள் ஆய்வு செய்தனா். உணவு தயாரிக்கும் கூடத்தில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து உணவு தயாரிக்கவும், பொது மக்கள் கூட்டம் சேராமல் தகுந்த இடைவெளி விட்டு வரிசையில் பெற்று செல்லவும் அறிவுறுத்துமாறு ஊழியா்களுக்கு உத்தரவிட்டனா்.

துணை வட்டாட்சியா் விஜிமாரி, வருவாய் ஆய்வாளா் அழகர்ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com