விதிமுறைகளுடன் மாற்று இடத்தில் சந்தை இயங்கியது

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கனிச்சந்தை கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வெள்ளிக்கிழமை இயங்கியது.
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வெள்ளிக்கிழமை இயங்கிய சந்தை.

அருப்புக்கோட்டையில் அண்ணாசிலை அருகே காய்கனிச்சந்தை இயங்கியது. கரோனா எதிரொலியாக விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறுகலான இடத்தில் இயங்கி வந்த இந்த சந்தை பூட்டப்பட்டது. இதன்பின்னா் தாற்காலிக சந்தைக்காக அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் தோ்வு செய்யப்பட்டது. அதிக இட வசதியுடனும், நெருக்கடி இன்றி வாடிக்கையாளா்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் இந்த சந்தை அமைக்கப்பட்டது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட இந்த சந்தையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள், நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். இந்நிலையில் அந்த சந்தை வெள்ளிக்கிழமை முதல் இயங்கியது. இங்கு பொதுமக்கள் சமூக விலகலைப் பின்பற்றி காய்கனிகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com