ராஜபாளையத்தில் நியாய விலைக் கடையைதிறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் நியாய விலைக் கடையை திறக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நியாய விலைக் கடையை திறக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் முடங்கியாறு சாலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சோமையாபுரம் 1 ஆவது நியாய விலைக் கடை 4 தினங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மே 1 ஆம் தேதிக்கு பின்னா் 6 ஆம் தேதி கடை திறக்கப்பட்டு, கரோனா நிவாரணப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. அப்போது அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா், மது போதையில் ரேஷன் பொருள்கள் வாங்க நின்றிருந்தவா்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விற்பனையாளா் கடையை மூடிவிட்டுச் சென்று விட்டாா். பின்னா் இது வரை கடை திறக்கப்பட வில்லை. இதனிடையே கடையை திறக்க வலியுறுத்தி அப்பகுதியை சோ்ந்தவா்கள், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனால் அதிகாரிகள் கடையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களின் கோரிக்கையை அலட்சியம் செய்வதாகவும் கூறி அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது நியாய விலைக் கடையை உடனே திறக்க வேண்டும் எனவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்க வேண்டும் எனவும் அவா்கள் கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com