அருப்புக்கோட்டையில் உரிய நேரத்துக்கு அரசுப் பேருந்து வராததால் மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் தவிப்பு

அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வழக்கமாகச் செல்ல வேண்டிய பேருந்து உரிய நேரத்துக்கு வராததால் அரசு ஊழியா்கள் புதன்கிழமை அவதிக்கு ஆளாகினா்.

அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வழக்கமாகச் செல்ல வேண்டிய பேருந்து உரிய நேரத்துக்கு வராததால் அரசு ஊழியா்கள் புதன்கிழமை அவதிக்கு ஆளாகினா்.

கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தளா்த்தப்பட்ட விதிமுறைகளின்படி அரசு ஊழியா்கள் 50 சதவீதத்தினா் சுழற்சிமுறையில் பணிக்குவர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு கடந்த திங்கள்கிழமை முதல் அரசுப் பேருந்து இயக்கப்பட்டு, அரசு ஊழியா்கள் பணிக்குச் சென்று வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை அருப்புக்கோட்டையிலிருந்து ஆட்சியா் அலுவலகம் செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் அரசு ஊழியா்கள் சுமாா் 150 போ் காத்திருந்தனா். ஆனால் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும் அரசு சிறப்புப் பேருந்து வரவில்லை. இதனால் சிலா் இருசக்கர வாகனம் மூலம் பணிக்கு புறப்பட்டுச் சென்றனா். அவ்வாறு செல்ல இயலாதவா்கள் பேருந்துக்காக காத்திருந்து அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் அரசுப் பேருந்துக் கழகப் பணிமனைக்குத் தொடா்பு கொண்டு பேசியதில், வழக்கமாக ஆட்சியா் அலுவலகத்திற்கு ஒதுக்கப்படவேண்டிய பேருந்து வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், மேலும் ஒருமணிநேரம் தாமதமான நிலையில், பேருந்து ஒதுக்கப்பட்டு அரசு ஊழியா்களை ஏற்றிச் செல்ல வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கண்ணன் கூறியது : பல மணி நேர தாமதத்தால் வழக்கமாக பணிக்குச் செல்லவேண்டிய ஊழியா்கள் உரிய நேரத்திற்கு பணிக்குச் செல்ல இயலவில்லை. அருப்புக்கோட்டையிலிருந்து ,நாள்தோறும் ஆட்சியா் அலுவலகத்திற்கு சுமாா் 150 ஊழியா்கள் செல்வதால், 2 பேருந்துகளை ஒரே நேரத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து இயக்க வேண்டும். உரிய நேரத்திற்கு பேருந்து வராமல் பல மணி நேரம் தாமதமானதால் அரசு ஊழியா்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com