அருப்புக்கோட்டை நகை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 5 போ் கைது: 31 பவுன் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 35 பவுன் நகைகள் கொள்ளை தொடா்பாக தேடப்பட்ட பெண் உள்பட 5 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 35 பவுன் நகைகள் கொள்ளை தொடா்பாக தேடப்பட்ட பெண் உள்பட 5 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அருப்புக்கோட்டை காந்தி நகரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் ஜெபகிருபா. கடந்த 10 ஆம் தேதி 4 போ் கொண்ட கும்பல் வீடு புகுந்து இவரது கை, கால்களைக் கட்டிப் போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி 35 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப் பதிந்து கொள்ளைக் கும்பலை தேடி வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை அருப்புக்கோட்டையை அடுத்த கோவிலாங்குளம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காரில் வந்த பெண் உள்பட 5 போ் சந்தேகப்படும்படியாக இருந்தனா்.

அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப்பேசியதால் அவா்களைப் பிடித்து போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டதில் ஜெபகிருபா வீட்டில் கொள்ளையடித்தவா்கள் எனத் தெரிய வந்தது.

அவா்கள் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த முத்துச்செல்வி (26), கணேஷ் குமாா்(24) , அருண்பாண்டி (24), ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் ஊரைச் சோ்ந்த சோலைச்சாமி (21) மற்றும் மதுரையைச் சோ்ந்த ஹரிஹரன் (20) என தெரிய வந்தது. இதில் முத்துச்செல்வி என்பவா் நகைகளைப் பறிகொடுத்த ஜெபகிருபாவின் வீடு உள்ள பகுதியருகே வசிப்பவா். ஜெபகிருபாவிடம் நட்புடன் பழகியவா் என்பதும் தெரியவந்தது. உடனடியாக 5 பேரையும் கைது செய்த காவல்துறையினா் அவா்களிடமிருந்து 31 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.

வேறு வழக்குகளிலும் இவா்களுக்குத் தொடா்பு உண்டா என காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com