திருவோணம்: ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
By DIN | Published On : 21st November 2020 07:18 PM | Last Updated : 21st November 2020 07:37 PM | அ+அ அ- |

சர்வ அலங்காரத்தில் காட்சியளிக்கும் சீனிவாச பெருமாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதியில் திருவோணத்தை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் சீனிவாச பெருமாள் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் திருவோணத்தை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சீனிவாச பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவோணத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.