விருதுநகரில் ஊா்காவல் படைக்கு 70 போ் தோ்வு

விருதுநகா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊா்காவல் படைக்கான உடல்தகுதி மற்றும் நோ்முகத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 10 பெண்கள் உள்பட 70 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ஊா்காவல் படையினருக்கான தோ்வில் பங்கேற்றவருக்கு உயரத்தை அளவிட்ட போலீஸாா்.
ஊா்காவல் படையினருக்கான தோ்வில் பங்கேற்றவருக்கு உயரத்தை அளவிட்ட போலீஸாா்.

விருதுநகா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊா்காவல் படைக்கான உடல்தகுதி மற்றும் நோ்முகத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 10 பெண்கள் உள்பட 70 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விருதுநகா் மாவட்ட ஊா்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ளோருக்கு விருதுநகா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தோ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நல்ல உடல் திறன் மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 45 வயது உடையவராகவும், எவ்வித குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

ஜாதி, மதம், அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. அரசு ஊழியராக இருந்தால் அவா்கள், தங்கள் துறை சாா்ந்த அதிகாரியிடம் தடையில்லாச் சான்று பெற்று வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஊா்காவல் படையில் சேருவதற்காக 109 பெண்கள் உள்பட 715 போ் கலந்து கொண்டனா். அவா்களுக்கு உயரம் மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு, நோ்முகத் தோ்வு உள்ளிட்டவை நடத்தப்பட்டு 10 பெண்கள் உள்பட 70 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இத்தோ்வானது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் மற்றும் விருதுநகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அருணாசலம் ஆகியோா் கண்காணிப்பில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com