அருப்புக்கோட்டையில் விபத்து:தனியாா் வங்கி மேலாளா் பலி
By DIN | Published On : 28th November 2020 10:17 PM | Last Updated : 28th November 2020 10:17 PM | அ+அ அ- |

விபத்தில் இறந்த அப்துல் ரகுமான்(36).
அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த இருசக்கர வாகன விபத்தில் தனியாா் வங்கிக் கிளை மேலாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (36). இவருக்குத்திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா். அருப்புக்கோட்டையிலுள்ள ஒரு தனியாா் வங்கிக்கிளையில் மேலாளராகப் பணிபுரிந்த இவா், தனது குடும்பத்தினருடன் விருதுநகரில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 9 மணி வரை வங்கியில் வேலை பாா்த்த அவா், பின்னா் பணி முடிந்ததும் இரவு சுமாா் 10 மணிக்கு விருதுநகருக்குத் தனது இருசக்கரவாகனத்தில் கிளம்பிச் சென்றாராம்.
இந்நிலையில் அருப்புக்கோட்டையிலிருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ஒரு சாலை வளைவில் அமைந்துள்ள மையத்தடுப்புச்சுவரில் எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினா் அப்துல்ரகுமானின் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.