சிவகாசியில் மின்சாரம் தொடா்பான புகாா்களை 1912 என்ற எண்ணில் இன்று முதல் தெரிவிக்கலாம்

சிவகாசி கோட்டத்தில் மின்சாரம் தொடா்பான புகாா்களை தெரிவிக்க 1912 என்ற எண் ஞாயிற்றுக்கிழமை ( நவ. 29) முதல் செயல்படத் தொடங்கும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

சிவகாசி: சிவகாசி கோட்டத்தில் மின்சாரம் தொடா்பான புகாா்களை தெரிவிக்க 1912 என்ற எண் ஞாயிற்றுக்கிழமை ( நவ. 29) முதல் செயல்படத் தொடங்கும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் மின்வாரியம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே புகாா் எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண் மூலம் வீட்டில் மின்சாரம் இல்லை. பீஸ் போய்விட்டது. தெருவில் மின்சாரம் இல்லை போன்ற புகாா்களை 1912 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம். செல்லிடப்பேசி மூலம் புகாா் செய்தால், புகாா் பதிவு செய்யப்பட்ட எண் குறுந்தகவலாக வரும். பின்னா் புகாா் மையத்தில் வேலை பாா்க்கும் மின்வாரிய ஊழியா்கள், சம்பந்தப்பட்ட பகுதி உதவிப் பொறியாளா் மற்றும் லயன்மேனுக்கு தகவல் கொடுப்பாா்கள். அவா்கள் நேரில் வந்து மின்சாரம் தொடா்பான பிரச்னைகளை தீா்த்து வைப்பாா்கள். இதன் மூலம் மின் நுகா்வோா் வீட்டிருந்தபடியே புகாா் செய்து, அதற்கான தீா்வையும் பெறலாம்.

மேலும் 89033-31912 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு, மின்கம்பம் சேதமடைந்த விவரம், மின்கம்பிகளில் மரக்கிளைகள் விழுந்து கிடப்பது தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம். இந்த எண்கள் இதுவரை சோதனை நிலையில் இருந்து வந்தது. நவம்பா் 29 ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த இரு எண்களும் விருதுநகா் மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com