ராஜபாளையத்தில் சாலை அமைக்கும் பணி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலை அமைக்கும் பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சாலை அமைக்கும் பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராஜபாளையத்தில் மலையடிப்பட்டி சாலை அமைக்கும் பணியை அமைச்சா் ராஜேந்திர பாலாஜியும், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபாவும் புதன்கிழமை தொடக்கிவைத்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ராஜபாளையம் நகர மக்களுக்குத் தேவையான நல்ல குடிநீா், தரமான சாலை, சுகாதாரமான வாழ்க்கை ஆகிய மூன்றும் செய்து தரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com