சிவகாசி அருகே அனுமதியின்றி பதுக்கியரூ.10 லட்சம் பட்டாசு பண்டல்கள் பறிமுதல்

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசு பண்டல்களை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி: சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசு பண்டல்களை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினம் நகரில் ஒரு கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தீப்பெட்டி மற்றும் பட்டாசு வட்டாட்சியா் லேகநாதன் தலைமையில் வருவாய்த் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு கட்டடத்தில் உரிய அனுமதியின்றி தீப்பெட்டி பண்டல்கள் 250, கம்பிமத்தாப்பூ பண்டல்கள் 320, பலவகை பட்டாசு பண்டல்கள் 720 மற்றும் அலுமினியம் பேஸ்ட் 40 டின் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

லாரி வாடகை நிறுவனம் நடத்தி வரும் சிவகாசியைச் சோ்ந்த வேல்சாமி மகன் காா்த்திகேயன்(28) இந்த பொருள்களை வெளிமாநித்திற்கு அனுப்ப வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. பட்டாசுகளை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா் கட்டடத்திற்கு ‘சீல்’ வைத்தனா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com