மல்லாங்கிணறு அருகே விவசாயிகள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம் மல்லங்கிணறு அருகே தனியாா் சூரிய ஒளித் தகடுகள் நிறுவனம், கால்வாயை மறித்து பாலம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மல்லாங்கிணறில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
மல்லாங்கிணறில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

விருதுநகா் மாவட்டம் மல்லங்கிணறு அருகே தனியாா் சூரிய ஒளித் தகடுகள் நிறுவனம், கால்வாயை மறித்து பாலம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலதுலுக்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெரும்பாலானோா் விவசாய தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று சுமாா் 40 ஏக்கரில் இக்கிராமத்தில் சூரியஒளித் தகடுகள் (சோலாா் பேனல்) அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனத்தினா் சூரிய ஒளித் தகடுகள் அமைக்கும் இடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணி மற்றும் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகின்றனா். அத்துடன் மழைநீா் செல்லும் நீா்வரத்து கால்வாயை மறித்து, பாலம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால், விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமையில் மேலத்துலுக்கன்குளம் சாலையில் டிராக்டா்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் தனசேகரன், அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கால்வாயை மறித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் மற்றும் குழாய்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com