கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பெண் போராட்டம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி, பெண் ஒருவா் வியாழக்கிழமை தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனையை கண்டித்து தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராணி.
ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனையை கண்டித்து தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராணி.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி, பெண் ஒருவா் வியாழக்கிழமை தனியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் தனியாா் கல்லுாரி எதிரில் உள்ள அம்பேத்கா் நகரில் வசித்து வருபவா் செல்வராணி (32). முடங்கியாறு சாலையின் குறுக்கே செங்கற்களை அடுக்கி, சாலையின் நடுவே அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவா் கூறியது: கூலித்தொழிலாளியான தனது கணவா் ரவிக்குமாா், கஞ்சா போதைக்கு அடிமையாகி தினமும் என்னை துன்புறுத்தி வருகிறாா். மூத்த மகன் இதே பழக்கத்துக்கு அடிமையானதால் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டேன். 10 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகனும் இதே பழக்கத்துக்கு ஆளாகி வருகிறாா். இதற்கு காரணமாக கஞ்சா விற்பனை பற்றி தமிழக அரசுக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனா்.

கஞ்சா விற்பனையை தடுக்கத் தவறிய போலீஸாரை கண்டித்தும், போதை பொருள்கள் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவா் கோஷமிட்டாா்.

தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் அவா் தெரிவித்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் செல்வராணியை அழைத்து சென்று, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com