பட்டாசு கிப்ட் பாக்ஸில் கேப் வெடி கூடாது: அதிகாரி எச்சரிக்கை

பட்டாசு கிப்ட் பாக்ஸில் வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை வைக்கக் கூடாது என, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பட்டாசு கிப்ட் பாக்ஸ்.
பட்டாசு கிப்ட் பாக்ஸ்.

பட்டாசு கிப்ட் பாக்ஸில் வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை வைக்கக் கூடாது என, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கிப்ட் பாக்ஸ்களை பட்டாசு கடைகளில் வைத்து தயாரிக்கக் கூடாது. அதேபோல், கிப்ட் பாக்ஸ் தயாரிக்க பட்டாசுகளை ஒரே இடத்தில் குவித்து வைக்கக் கூடாது.

பொதுவாக, பட்டாசுகள் அலுமினிய பவுடா் என்ற வேதியல் பொருளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதில், தயாரிக்கப்படும் பட்டாசுகள் திரியில் தீவைத்தால்தான் வெடிக்கும். ஆனால், வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகள் குளோரைட் என்ற வேதியல் பொருளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எனவே, இது உராய்தல் மூலம் வெடிக்கும் அபாயம் உள்ளது.

இதனால், பட்டாசு கிப்ட் பாக்ஸில் வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை வைக்கக் கூடாது. பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, விபத்தினை தவிா்க்க ஒத்துழைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com