அருப்புக்கோட்டையில் நவராத்திரி விழா: லிங்க பைரவிக்கு சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை காந்தி நகரிலுள்ள ஈஷா யோகா மையக்கிளையில் நவராத்திரி 6ம் திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை ஈஷா யோகா மையக்கிளையில் வியாழக்கிழமை இரவு நவராத்திரிவிழா 6ஆம் திருநாள் வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு லிங்கபைரவி தேவி.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகரிலுள்ள ஈஷா யோகா மையக்கிளையில் நவராத்திரி விழா 6ஆம் திருநாளை முன்னிட்டு அருள்மிகு லிங்க பைரவி தேவி திருஉருவப் படத்திற்கு சிறப்பு மலர்மாலை மற்றும் வஸ்திரத்தால் அலங்காரங்கள் செய்யப்பட்டன.

பின்னர் வெண்ணெய், ஸ்ரீபலம், மஞ்சள், குங்குமம், சந்தனம், எலுமிச்சம் பழம், வேப்பிலை, கண்ணாடி வளையல்கள், மலர்கள், உள்ளிட்ட 11 விதப்பொருள்களை தேவிக்கு அர்ப்பணித்தும் மற்றும் நைவேத்தியப் பொருள்களான சர்க்கரைப் பொங்கல், சுண்டல் ஆகியவற்றை தேவிக்குப் படைத்தும் சிறப்பு மந்திரங்கள் ஓதி, வழிபாட்டுப் பாடல்கள் பாடியும், தியானம் செய்தும் பெண்கள் வழிபாடு நடத்தினர். 

வழிபாட்டு நிறைவில் முழு அலங்காரத்தில் அருள்மிகு லிங்க பைரவி தேவி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஜெயந்திமாலா, சுந்தரமூர்த்தி, நீலா, செளந்தர்ராஜன், மணிவண்ணன், அனிதா, பெத்தம்மாள், லலிதா மற்றும் பலர் செய்திருந்தனர். வழிபாட்டின்போது சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு லிங்கபைரவி தேவி அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com