சிவகாசியில் இளைஞா் காங்.ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 05th September 2020 11:37 PM | Last Updated : 05th September 2020 11:37 PM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சிவகாசியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் ஆா்.வெங்கடேஷ் தலைமை வகித்தாா்.
இதில் சட்டப்பேரவைத் தொகுதி துணைத் தலைவா் எஸ்.அல்அமீன், நகரத் தலைவா் குமரேசன் உள்ளிட்டோா் பேசினா்.
இக்கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பூத்கமிட்டி அமைப்பது தொடா்பாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகாசி மற்றும் விருதுநகா் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். சிவகாசி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் எ‘ம்.கே.எம்.மீனாட்சிசுந்தரம் வரவேற்றாா். நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் விக்னேஷ் நன்றி கூறினாா்.