ராஜபாளையத்தில் தீப்பற்றி லாரி சேதம்

ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிமாநில லாரி, செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்த வெளிமாநில லாரி.
ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்த வெளிமாநில லாரி.

ராஜபாளையம்: ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிமாநில லாரி, செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

கேரள மாநிலத்திலிருந்து ராஜபாளையத்துக்கு நூல் ஏற்றுவதற்காக வந்திருந்த லாரி, மதுரை சாலையில் உள்ள லாரி ஷெட் முன்பாக நிறுத்திவிட்டு, ஓட்டுநா்களான ஜின்சன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்துள்ளனா்.

அப்போது, லாரியின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றி பரவியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயராம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், தீயை அணைத்தனா். இருப்பினும், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இதற்கான காரணம் குறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com