ஊராட்சி மன்ற அலுவலகத்தை மாதா் சங்கத்தினா் முற்றுகை
By DIN | Published On : 18th September 2020 10:45 PM | Last Updated : 18th September 2020 10:45 PM | அ+அ அ- |

சத்திரரெட்டியபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
படவிளக்கம்...
விருதுநகா், செப். 18: நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சத்திரரெட்டியபட்டி ஊரா ட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கத்தின் கிளை செயலா் கனகா தலைமை வகித்தாா்.
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நூறு நாள் பணி வழங்குவதுடன், வாரந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
முடிவில், ஊராட்சி செயலரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் உமாமகேஸ்வரி, மாநிலச் செயலா் லெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.