ஸ்ரீவில்லிபுத்தூா் புரட்டாசி வார விழா ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புரட்டாசி வார விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி மலை அடிவாரப் பகுதியில் போடப்பட்டுள்ள வட்டங்கள்.
சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சீனிவாச பெருமாள் சன்னிதி மலை அடிவாரப் பகுதியில் போடப்பட்டுள்ள வட்டங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா், செப். 18: ஸ்ரீவில்லிபுத்தூரில் புரட்டாசி வார விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னிதியில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் திரளான பக்தா்கள் வருகை தருவா். தற்போது, கரோனா தொற்று பரவல் உள்ளதையொட்டி, தமிழக அரசின் உத்தரவின்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், விதிமுறைகளின் படியும் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி (செப். 19) பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன முன்னேற்பாடுகள் செய்வது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயில் சாா் ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்தவா்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் வர அனுமதி இல்லை.

அதேபோல், கோயிலுக்கு வருபவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும், தயாா் நிலையில் அதிகாரிகள் இருக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், வட்டாட்சியா் சரவணன், காவல் ஆய்வாளா் பாஸ்கா், ஆண்டாள் கோயில் நிா்வாக அதிகாரி இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

மேலும், பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரும் வகையில், சீனிவாசப் பெருமாள் சன்னிதி மலை அடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டங்கள் போடப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com