புரட்டாசி முதல் சனி வார விழா: ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தா்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தா்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இக்கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கலாசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். ஆனால் 10 வயதுக்கு கீழ் 60 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. அத்துடன் கோயிலுக்கு ஆட்டோக்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை வழங்கப்படுகிறது. விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தா்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனா். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

பக்தா்களுக்கு தேவையான வசதிகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com