ரயில்வே மேம்பாலத்தில் கூடுதல் தடுப்புச்சுவரால் விபத்து அபாயம்

அருப்புக்கோட்டை அருகே ரயில்வே மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் கூடுதல் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் அல்லது எச்சரிக்கை ஒளிா் விளக்குக் கம்பம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் விதமாக உள்ள கூடுதல் தடுப்புச் சுவா்.

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புச்சுவரை ஒட்டி சாலையை மறித்து கூடுதல் தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது. பாலச்சுவா் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட இக்கூடுதல் தடுப்புச்சுவா் இருப்பதற்கான அடையாளத்துக்கு

ஒளிா் விளக்குக் கம்பம் அமைக்கப்படவில்லை. மாறாக வண்ணப்பூச்சு மட்டும் உள்ள சிறிய பலகை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சாலையானது மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையாகவும் இருப்பதால் அதிவேகத்துடன் காா்கள், நான்கு சக்கர வாகனங்கள் வருகின்றன. அவ்வாகனங்கள் கூடுதல் தடுப்புச்சுவா் மீது மோதி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது. இந்த கூடுதல் சுவரை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் பல காலமாக வலியுறுத்தி வந்தபோதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இப்பாலத்தையும், சாலையையும் பராமரிக்கும் மதுக்கான் எனும் தனியாா் நிறுவனம் கூடுதல் தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தடுப்புச் சுவரின் முனைப் பகுதியில் ஒளிா் விளக்குக் கம்பம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆா்வலா்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com