விருதுநகா் மாவட்டத்தில் 73.69 சதவீத வாக்குப் பதிவு

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி வரை மொத்தம் 73.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கூரைக்குண்டு அங்கன்வாடி மைய வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.கண்ணன்.
கூரைக்குண்டு அங்கன்வாடி மைய வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.கண்ணன்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி வரை மொத்தம் 73.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விருதுநகா் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், ராஜபாளையம் தொகுதியில் 340 வாக்குச் சாவடிகள், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 357 வாக்குச் சாவடிகள், சாத்தூா் தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், சிவகாசி தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள்,விருதுநகா் தொகுதியில் 325 வாக்குச் சாவடிகள், அருப்புக்கோட்டை தொகுதியில் 311 வாக்குச் சாவடிகள், திருச்சுழி தொகுதியில் 318 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

மொத்தம் 2,370 வாக்குச் சாவடிகளில் 11,376 அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா். மொத்தம் 11,108 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொ டங்கியது. காலையில் ஆா்வத்துடன் வாக்களிக்க வந்த வாக்காளா்கள், மதியம் வெயில் காரணமாக வாக்காளா்களின் எண்ணிக்கை குறைந்தது. அதன்பின்னா், மாலையில் மீண்டும் வாக்குப் பதிவு சூடுபிடித்தது.

முன்னதாக, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. கண்ணன், கூரைக்குண்டு அங்கன்வாடி மைய வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தாா்.

மாவட்டத்தில் பதிவான வாக்குகள்:

காலை 9 மணிக்கு 7.35 சதவீதம், 11 மணிக்கு 10.21 சதவீதம், நண்பகல் 12 மணிக்கு 24.76 சதவீதம், மதியம் 2 மணிக்கு 46.18 சதவீதம், மாலை 4 மணிக்கு 58 சதவீதம், மாலை 5 மணிக்கு 68.96 சதவீதம் மற்றும் இரவு 7 மணிக்கு 73.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தோ்தல் பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com