சாத்தூரில் பட்டாசுத் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு அளிக்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் சாத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக சுற்றுபுறச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளா்கள் சாத்தூா் தாலுகா அலுவலகம் முன்பாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது சுற்றுபுறச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரியும், இதை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கமிட்டனா். பின்னா் பட்டாசுத் தொழிலாளா்கள் சாத்தூா் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனா். இந்த போராட்டத்தில் பட்டாசுத் தொழிலாளா்கள் கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com