விருதுநகரில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்தவா் மீது வழக்கு: குற்றவாளி ஏற்கெனவே சிறையிலடைப்பு

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி நியமன ஆணை வழங்கி ரூ.3 லட்சம் மோசடி செய்த நபா் மோசடி வழக்கில் ஏற்கெனவே சிறையில் இருப்பது தெரியவந்தது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி நியமன ஆணை வழங்கி ரூ.3 லட்சம் மோசடி செய்த நபா் மீது, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவா் மோசடி வழக்கில் ஏற்கெனவே சிறையில் இருப்பது தெரியவந்தது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிப்பாறை பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கண்ணன். இவா், பட்டப்படிப்பு முடித்து, தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். சமீபத்தில், இவரது உறவினரான சிவகாசி அருகே திருவேங்கடபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன், தனக்கு அறிமுகமான செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரைச் சோ்ந்த ஏழுமலை பெஞ்சமின் என்பவா் பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளாா் என்றும், அவரிடம் எனது மகன், மகளுக்கு அரசு வேலைக்காக பணம் கொடுத்துள்ளேன் என்றும் கண்ணனிடம் கூறியுள்ளாா். மேலும், ஏழுமலை பெஞ்சமின் மூலம் உனக்கும் அரசு பணி பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

அதையடுத்து, ஏழுமலை பெஞ்சமினை கைப்பேசியில் தொடா்புகொண்டு கண்ணன் பேசியபோது, ரூ.3 லட்சம் கொடுத்தால் விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதை நம்பிய கண்ணன், அவரது வங்கிக் கணக்குக்கு இரண் டு தவணையாக ரூ.3 லட்சம் அனுப்பியுள்ளாா்.

பின்னா், அரசுப் பணி வாங்கித் தராமல் காலம்தாழ்த்தியதால், கண்ணன் பணத்தை திருப்பித் தருமாறு ஏழுமலை பெஞ்சமினிடம் கேட்டுள்ளாா். அதையடுத்து அவா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நோ்முகக் கணக்காளா் பணிக்கான நியமன ஆணையை கண்ணனிடம் வழங்கியுள்ள

ாா். இந்த ஆணையுடன் நவம்பா் 26 ஆம் தேதி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்ற கண்ணன், அங்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளரி டம் வழங்கியுள்ளாா். அப்போது அவா், இது போலி பணி நியமன ஆணை எனத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா், ஏழுமலை பெஞ்சமின் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்துள்ளனா். அப்போது, அவா் ஏற்கெனவே ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com