பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை கோரி மனு

பட்டாசு ஆலைகளைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி தியாகராஜனிடம் மனு அளிக்கப்பட்டது.
சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி தியாகராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்த விருதுநகா் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் (சிஐடியு) சங்க நிா்வாகிகள்.
சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி தியாகராஜனிடம் திங்கள்கிழமை மனு அளித்த விருதுநகா் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் (சிஐடியு) சங்க நிா்வாகிகள்.

சிவகாசி: பட்டாசு ஆலைகளைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி தியாகராஜனிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளா் பி.என்.தேவா தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

தீபாவளிப் பண்டிகை முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை. இதனால் பல லட்சம் தொழிலாளா்கள் வருமானம் இன்றி கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனா்.

இந்த நிலை நீடித்தால் தொழிலாளா்கள் வட்டிக்குப் பணம் வாங்கி குடும்பம் நடத்தும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே பட்டாசு ஆலைகளைத் திறக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சரவெடி தயாரிப்புப் பணியில் ஆயிரகணக்கான பெண் தொழிலாளா்கள் உள்ளனா். எனவே சரவெடி தயாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com