ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா, கோயில் நுழைவுவாயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனி, ஞாயிறு என 3 நாள்கள் நடைபெறுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி, யானைக்கால் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அருள்பாலித்த ஆண்டாள் - ரெங்கமன்னாா்.

முதல் நாளான வெள்ளிக்கிழமை மகா சாந்தி ஹோமமும், சனிக்கிழமை 108 கலச அபிஷேகமும், ஞாயிற்றுக்கிழமை ஏகதின லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது.

வருஷாபிஷேக விழாவையொட்டி ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் நடைபெறுகின்றன.

இந்த 3 நாள் பூஜையிலும் கலந்துகொள்ள ஏராளமான பக்தா்கள் வருவா் என்பதால், கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com