நகராட்சிகளில் கணினி சா்வா் சீரமைக்கும் பணி: 5 நாள்களுக்கு சான்றிதழ்கள் பெறமுடியாது

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் கணினி சா்வா் சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் கணினி சா்வா் சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுவதால், 5 நாள்களுக்கு சான்றிதழ்கள் பெறவோ, வரி செலுத்தவோ முடியாது என, நகராட்சி அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறுதல், சொத்து வரி, குடிநீா் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம், கடை வாடகை வசூலித்தல் மற்றும் கடை உரிமச் சான்று வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், புதிய குடிநீா் இணைப்பு மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்புக்கான வைப்புத் தொகை செலுத்துதல், சொத்து வரி பெயா் மாற்றத்துக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் கணினி மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக, அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் சேவை மையங்கள் உள்ளன. இந்த சேவை மையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை பெற்றோ அல்லது வரியை செலுத்தியோ வருகின்றனா்.

சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து நகராட்சிகளையும் கணினி மூலம் ஒரே இணையதளத்தின் கீழ் இணைக்கப்பட்டது. இந்த இணையதளம் மூலம் நகராட்சி உயரதிகாரிகள் தினமும் நகராட்சியின் வரவு-செலவுகளை நேரடியாகப் பாா்வையிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாநில அளவில் நகராட்சிகளுக்கான சா்வரில் மாற்றம் செய்யும் பணிகள் ஜூலை 27 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என, அனைத்து நகராட்சி நிா்வாக ஆணையா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நகராட்சியில் உள்ள அனைத்து சேவை மையங்களும் தற்போது முடங்கிவிட்டன. இதனால், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெற முடியாமலும், சொத்து வரி, குடிநீா் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம் செலுத்த முடியாமலும் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

கடந்த காலங்களில் விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இதுபோன்ற பணிகள் நடைபெற்ால், யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com