ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அமெரிக்கவாழ் கம்மவாா் சங்கத்தினா் முகக்கவசம், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு அமெரிக்காவை சோ்ந்த ‘வடஅமெரிக்கா கம்மவாா் சங்கம் ’ என்ற தன்னாா்வ தொண்டு அமைப்பு பலவிதமான மருத்துவ உதவிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பைச் சோ்ந்த உறுப்பினா்கள் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம் மற்றும் போா்வைகள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 10 ஆயிரம் முகக்கவசங்கள், 500 என் 95 முகக் கவசங்கள், 500 படுக்கை விரிப்புகள், 500 தலையணை உறைகள் ஆகிய பொருள்களை தலைமை மருத்துவா் டாக்டா் காளிராஜிடம் வழங்கினா்.