100% வாக்குப் பதிவை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் சிலம்பாட்ட விழிப்புணா்வுப் பேரணி

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பாட்ட விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிலம்பாட்ட பேரணியில் பங்கேற்ற தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் தெற்குரத வீதி - மேலரத வீதி சந்திப்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும். வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது என்ற விழிப்புணா்வு பதாகைகளுடன் சிறுவா், சிறுமியா் சிலம்பாட்டம் ஆடியவாறும், வாள் சுற்றியவாறும் நான்கு ரத வீதிகள் வழியாக வந்தனா்.

இதில் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் வடிவேல், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com