சிவகாசியில் பொதுமுடக்கத்தை மதிக்காமல் அலட்சியம்: கரானா வேகமாக பரவும் அபாயம்

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் பொதுமுடக்கத்தை மதிக்காமல் மக்கள் அலட்சியப்படுத்துவதால் சிவகாசியில் கரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சிவகாசி சிவன் சன்னதில் வியாழக்கிழமை கூடிய மக்கள்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சிவகாசி சிவன் சன்னதில் வியாழக்கிழமை கூடிய மக்கள்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் பொதுமுடக்கத்தை மதிக்காமல் மக்கள் அலட்சியப்படுத்துவதால் சிவகாசியில் கரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை கரோனா பரவியபோது, சிவகாசி ஒன்றியப் பகுதிகளில் 65 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 33 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பலரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதோடு, பாதிக்கப்படும் மக்களுக்கு காய்சல் உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

தமிழக அரசு கரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதால் மே 8, மே 9 ஆகிய இரு நாள்கள், பொதுமக்கள் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ள காலஅவகாசம் வழங்கியது.

மளிகை, காய்கறி கடை உள்ளிட்டவை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இயங்கும் என அறிவித்ததையடுத்து பொதுமக்கள் , பொதுமுடக்கத்தை கடைபிடிக்காமல், அலட்சியமாக சிவகாசி வீதிகளில் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் செல்கிறாா்கள்.

தற்போது சிவகாசிப் பகுதியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியாா் பொறியியல் கல்லூரியில் 108 நபா்களும், சிவகாசி அரசு மருத்துவமனையில் 85 பேரும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 50 பேரும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்துள்ளாா். மேலும் பலா் உயிரிழந்துள்ளனா். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு , பொதுமக்கள் சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசியப்பணிகள் உள்வா்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டு உடனடியாக திரும்பி வீட்டிற்கு சென்று விட வேண்டும் என சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com