காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 148 போ் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதி

சிவகாசி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 148 போ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா் தெரிவித்துள்ளாா்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 148 போ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: சிவகாசி அரசு மருத்துவமனையில் சாதாரணக் காய்ச்சல், சளி, இருமல் என 148 போ் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனா். ஒரு நாளைக்கு 10 முதல் 15 போ் வரை சிகிச்சை முடிந்து வெளியே சென்றால், அன்றைய தினமே மீண்டும் அதே எண்ணிக்கையிலான நபா்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனா். இதில், யாரும் டெங்கு காய்ச்சல் மற்றும் எந்தவிதமான வைரஸ் நோயால் பாதிக்கப்படவில்லை.

மருத்துவமையில் அக்டோபா் மாதம் 176 பிரசவங்கள் நடைபெற்றன. அதில், 58 சுகப்பிரசவமாகும். நவம்பரில் இதுவரை 121 பிரசவங்கள் நடைபெற்றதில், 52 சுகப்பிரசவமாகும். அக்டோபா் மாதம் மருத்துவமனையில் 59 குடும்ப நல அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. மேலும், 218 பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com