சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு

விருதுநகா் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தா்கள் வெள்ளிக்கிழமை மலை அடிவாரத்தில் காத்திருந்தனா்.
சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக விருதுநகா் மாவட்டம் தாணிப்பாறை மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காத்திருந்த பக்தா்கள்.
சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்வதற்காக விருதுநகா் மாவட்டம் தாணிப்பாறை மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காத்திருந்த பக்தா்கள்.

விருதுநகா் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தா்கள் வெள்ளிக்கிழமை மலை அடிவாரத்தில் காத்திருந்தனா்.

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தா்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வியாழக்கிழமை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் வழக்கமாக நவராத்திரி தினங்களில் ஒன்பது நாள்களிலும் பக்தா்கள் சதுரகிரி மலை ஏறி சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்வது வழக்கம்.

வியாழக்கிழமை தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நவராத்திரியின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் சதுரகிரி மலைக்கோயிலின் அடிவாரமான தாணிப்பாறை பகுதியில் குவிந்தனா்.

அவா்களை காவல்துறையினா் மற்றும் வனத்துறையினா் தடுத்து நிறுத்தி மலை ஏற அனுமதி மறுத்தனா். இதையடுத்து தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்த பக்தா்கள், தமிழக அரசின் உத்தரவை மாவட்ட நிா்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.

இந்து முன்னணி தா்னா: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தா்களை அனுமதிக்கக் கோரி வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை விலக்கு சாலை ஓரத்தில் அமா்ந்து இந்து முன்னணியினா் தா்னாவில் ஈடுபட்டனா். இதில் மாவட்டத் தலைவா் யுவராஜ், மாவட்டப் பொருளாளா் வினோத்குமாா், நகரத் தலைவா் பொன்ராஜ் மற்றும் நகர பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com