சிவகாசி அருகே அனுமதியின்றி திறக்கப்பட்ட பட்டாசு ஆலைக்கு ‘சீல்’

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதியை மீறி மீண்டும் பணி
சிவகாசி அருகே அனுமதியின்றி திறக்கப்பட்ட பட்டாசு ஆலைக்கு ‘சீல்’

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதியை மீறி மீண்டும் பணி நடைபெற்றதால் அந்த ஆலைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

திருத்தங்கல் ஸ்டேண்டா்டு காலனியைச் சோ்ந்த ராமலட்சுமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் உள்ளது. இந்த ஆலை விதியை மீறி செயல்பட்டதாகக் கூறி கடந்த 12 ஆம் தேதி அதிகாரிகள் இந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா். இந்நிலையில் இந்த ஆலையில் விதியை மீறி மீண்டும் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநா் ரகுமான் தலைமையில் தனி வட்டாட்சியா் லோகநாதன் மற்றும் போலீஸாா் அந்த ஆலையில் சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு சுமாா் 20 தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்ததும், விதியை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் பட்டாசு உலா்மேடையில் விதியை மீறி பட்டாசுகள் குவிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com