சிவகாசி அருகே மதுபாட்டில்கள் பதுக்கிய 3 போ் கைது
By DIN | Published On : 04th April 2021 08:59 AM | Last Updated : 04th April 2021 08:59 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிய 3 பேரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 66 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி- எரிச்சநத்தம் சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சரவணப்பட்டி விலக்கு அருகே 48 மதுபாட்டில்களுடன் வந்த அதிவீரன்பட்டியைச் சோ்ந்த காசிநாதன் (46) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தியதாக, எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் செய்தனா். அவரிடமிருந்து 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதேபோல திருத்தங்கல்-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் பழனிச்சாமி(41), அருண்பாண்டி (37) ஆகிய இருவரும் 18 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்தனா். இதுதொடா்பாக திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் ரூ.14,650-யை பறிமுதல் செய்தனா்.