விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

விருதுநகரில் அமைந்துள்ள ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) வெயிலுகந்தம்மன் மற்றும் மாரியம்மன்.

விருதுநகரில் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில், கடந்த மாா்ச் 14 ஆம் தேதி பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து, கொடியேற்ற நிகழ்ச்சி மாா்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.

அதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் நகா் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 4 ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற்றது. இதில், விருதுநகா் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், உருவப் பொம்மைகளை வழங்கியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

இந்நிலையில், பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் பெரிய தேரிலும், விநாயகா் சிறிய தேரிலும் எழுந்தருளிய தேரோட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இத்தேரோட்டமானது, பஜாா், தெற்கு ரத வீதி, மேலரத வீதி வழியாகச் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com