காரியாபட்டி அருகே சிறுத்தைகள் நடமாட்டமா? வனத்துறையினா் ஆய்வு

காரியாபட்டி அருகே அல்லிக்குளம் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினா் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அல்லிக்குளம் காட்டுப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினா்.

வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஒட்டிய பகுதியில் மேற்கு தொடா்ச்சி மலை அமைந்துள்ளது. இந்நிலையில், வனப் பகுதியில் வெப்பம், தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மான், காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகள் வனத்திலிருந்து வெளியேறி வருகின்றன.

இந்நிலையில், அல்லிக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் 2 சிறுத்தைகள் தண்ணீா் குடித்ததை அக்கிராமத்தைச் சோ்ந்த சிலா் புதன்கிழமை பாா்த்துள்ளனா். இதுகுறித்து அக்கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலா்கள் அல்லிக்குளம் பகுதியில் சிறுத்தையின் கால் தடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். மேலும், அருகில் உள்ள அத்திகுளம், புதுப்பட்டி கிராம காட்டுப் பகுதிகளிலும் வனத்துறையினா் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்வித தடயமும் கிடைக்க வில்லை. இருப்பினும் அப்பகுதியில் சிறுத்தை மற்றும் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமார பொருத்தப்பட உள்ளதாக வனத்துறை அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com