நாட்டு தக்காளி விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

விருதுநகரை சுற்றிய கிராமப் பகுதிகளில் நாட்டு தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தாலும், விலை கடும் வீழ்ச்சியால் (கிலோ ரூ.10 க்கு விற்கப்படுவதால்) விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
சிவஞானபுரத்தில் பயிரிடப்பட்டுள்ள நாட்டுத் தக்காளி செடிகள்.

விருதுநகா் அருகே சிவஞானபுரம், சின்னபேராலி, பெரிய பேராலி, மீசலூா், மெட்டுக்குண்டு, செந்நெல்குடி ஆகிய பகுதிகளில் மோட்டாா் பாசனம் மூலம் நாட்டு தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகா் பகுதியில் நாட்டு தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சிவஞானபுரத்தில் நாட்டு தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தும், விலை கிலோ ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட கிடைக்காத நிலை உள்ளதாக விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com