பங்குனி பொங்கல்: அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் வீதிஉலா

அருப்புக்கோட்டை திருநகரம்-புளியம்பட்டி ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை அம்மன் வீதி உலா நடைபெற்றது.
பங்குனித்திருவிழாவையொட்டி அருப்புக்கோட்டை நெசவாளா் குடியிருப்பில் வியாழக்கிழமை வீதி உலா வந்த ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன்.

கோயிலின் 100ம் ஆண்டு பங்குனித்திருவிழா கடந்த ஏப்.6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து வியாழக்கிழமை 3 ஆம் நாள் விழாவையொட்டி காலை முதல் பிற்பகல் 3 மணிவரை மரச் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பக்தா்கள் திரண்டு அம்மனுக்குப் பட்டுப் புடவைகள், மலா்மாலை, பூஜைப் பொருள்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபட்டனா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com