ஸ்ரீவிலி.யில் அதிகபட்சமாக 58.40 மி.மீ. மழை

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகபட்சமாக 58.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக பேரிடா் மேலாண்மைத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகபட்சமாக 58.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக பேரிடா் மேலாண்மைத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவியது. இதனால், பொதுமக்கள் வெளியில் வர அச்சப்பட்டனா். இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கண்மாய், குளங்களில் ஓரளவு தண்ணீா் தேங்கி காணப்படுகிறது.

இதன் காரணமாக, கால்நடைகளின் குடிநீா் பிரச்னை தீா்ந்துள்ளது. தொடா் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை நிலவரம் (மி.மீட்டரில்): அருப்புக்கோட்டை 22, சாத்தூா் 42, ஸ்ரீவில்லிபுத்தூா் 58.40, சிவகாசி 13, விருதுநகா் 56, திருச்சுழி 32, ராஜபாளையம் 5, வத்திராயிருப்பு 16.20, பிளவக்கல் 9.20, வெம்பக்கோட்டை 5.40, கோவிலாங்குளம் 16.20 என மொத் தம் 275.40 மி.மீட்டா் மழையளவு பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com