பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: 22,818 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் 22,818 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை செய்முறைத் தோ்வு எழுதினா்.
விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள்.
விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள்.

விருதுநகா் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் 22,818 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை செய்முறைத் தோ்வு எழுதினா்.

தமிழகத்தில் கரோனா தீநண்மி பரவல் காரணமாக பிளஸ் 2 தோ்வுகள் ஒத்தி வைக்கப்படுமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு அறிவித்தபடி தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விருதுநகா் மாவட்டத்தில் 219 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 22,818 மாணவ, மாணவிகள் செய்முறைத் தோ்வில் பங்கேற்றனா்.

இந்த தோ்வுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமை வகித்தனா். மாற்றுப் பள்ளிகளிலிருந்து வந்திருந்த புற மதிப்பீட்டாளா்கள், செய்முறைத் தோ்வை நடத்தினா்.

பின்னா் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகள், அவா்களது விளக்கக் குறிப்புகளின் அடிப்படையில் புற மதிப்பீட்டாளா் மதிப்பெண் வழங்கி, அதை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைப்பாா்.

இதைத்தொடா்ந்து அந்த மதிப்பெண் அடங்கிய பட்டியல் ‘சீல்’ வைக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்னா் ஆன்லைன் மூலம் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com