நடிகா் விவேக்கின் நினைவாக மறையூரில் 100 மரக்கன்றுகள் நடவு
By DIN | Published On : 18th April 2021 10:07 PM | Last Updated : 18th April 2021 10:07 PM | அ+அ அ- |

மறையூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகளை நட்ட இளைஞா்கள்.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி ஒன்றியம் மறையூரில் மறைந்த நடிகா் விவேக்கின் நினைவாக 100-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
நரிக்குடி அருகே உள்ளது மறையூா் கிராமம். இந்த கிராம இளைஞா்கள் ஒன்றிணைந்து மறைந்த நடிகா் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மறையூா் கிராமத்தின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிறுத்தம், கோயில் வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் கண்மாய்க் கரை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனா்.
இந்நிகழ்ச்சியில் மறையூா் கிராம இளைஞா்கள் சுமாா் 20-க்கு மேற்பட்டோா் பங்கேற்றனா். விருதுநகா்:
விருதுநகரில், நடிகா் விவேக் மறைவையொட்டி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் ஆலமரம் தன்னாா்வல அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
நடிகா் விவேக் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை அதிகாலை சென்னையில் உயிரிழந்தாா். இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்திய ஆலமரம் தன்னாா்வல அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை விருதுநகா் காந்தி நகா் பகுதியில் மரக்கன்றுகள் நட்டனா். இதில் அந்த அமைப்பை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னாா்வலா்கள் தங்கராஜ், மாரிக்கனி ஆகியோா் செய்திருந்தனா்.