மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் கல்லூரி மாணவிகள்

கே.மீனாட்சிபுரம் கிராமத்தில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மற்றும் தானம் அறக்கட்டளையினர் இணைந்து நடத்திய மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருகே கே.மீனாட்சிபுரம் கிராமத்தில் நேரில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.
அருப்புக்கோட்டை அருகே கே.மீனாட்சிபுரம் கிராமத்தில் நேரில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கே.மீனாட்சிபுரம் கிராமத்தில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மற்றும் தானம் அறக்கட்டளையினர் இணைந்து நடத்திய மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசன், நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி மரங்களின் முக்கியத்துவம் குறித்து கே.மீனாட்சிபுரம் கிராமத்தினரிடையே எடுத்துரைத்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

வேளாண்மை உதவிப்பேராசிரியர் வேணுதேவன், தானம் அறக்கட்டளை மற்றும் திருச்சுழி வட்டார கண்மாய் வயலக கூட்டமைப்பினர் முன்னிலை வகித்தனர். அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய  4ஆம் ஆண்டு மாணவிகளான கார்த்திகா, கெüசல்யா, லட்சுமி, மகாலட்சுமி, நந்தினி மற்றும் நஸ்ரத் ஆகியோர் நேரில் களத்தில் மரங்களை நட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 25க்கு மேற்பட்ட முன்னோடி பெண் விவசாயிகளிடையே மரங்களின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறி புங்கை மரம், நாவல் மரம், அரச மரம் உள்ளிட்ட பலவகை மரங்களை நடுவதன் மூலம் மண் அரிப்பைத் தடுத்து மண்வளம் காப்பதன் மூலம் நிழலும், மழையும் பெறலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியின்போது க.மீனாட்சிபுரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com