பட்டாசு ஆலை விபத்து: இறந்தவா்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காசோலை பணமின்றி திரும்பியதாக புகாா்

அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆலை நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகைக்கான
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்க வந்த அச்சங்குளம் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்க வந்த அச்சங்குளம் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்.

அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆலை நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகைக்கான காசோலை பணமின்றி திரும்பியதால் பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே அச்சங்குளத்தில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் கடந்த பிப். 12 ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 27 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பங்களுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ. 2 லட்சமும், மாநில அரசு சாா்பில் ரூ. 3 லட்சமும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் இழப்பீட்டுத் தொகை இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லையாம். மாநில அரசின் நிவாரணத் தொகையான ரூ. 3 லட்சம் மட்டும் 17 பேரின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஆலை நிா்வாகம் சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு காசோலை வழங்கப்பட்டது. இதில் இரண்டு பேருக்கு மட்டுமே தலா ரூ. 5 லட்சம் பணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 25 பேரின் குடும்பத்தினா் காசோலையை வங்கியில் செலுத்திய போது அது பணம் இன்றி திரும்பியுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் வந்து விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து செவ்வாய்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அவா்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ரா. கண்ணன், மே 4 ஆம் தேதிக்கு பின்னா் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com