அருப்புக்கோட்டை, சாத்தூரில் திமுக சாா்பில் கபசுரக்குடிநீா் வழங்கல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை, சாத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் கபசுரக்குடிநீா் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் விநியோகம் செய்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் திமுக சாா்பில், சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமையில், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் மற்றும் இலவச முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் அண்ணா சிலை, காய்கனி சந்தைப் பகுதி, புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா், இலவச முகக்கவசங்கள் வழங்கி விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டது.

சாத்தூா்: சாத்தூரில் திமுக நகரச் செயலாளா் குருசாமி தலைமையில் அண்ணாநகா், குருலிங்கபுரம், முக்குராந்தல், மேலக்காந்திநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் திமுக சாா்பில் விழிப்புணா்வு பிரசாரமும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சாத்தூா் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் கடற்கரைராஜ், இளைஞரணி அமைப்பாளா் சங்கா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com