சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் வருவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் வருவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள நுழைவாயிலை மூடி வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள நுழைவாயிலை மூடி வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் வருவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் கூறியிருப்பதாவது: வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயிலில், பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், ஏப். 24 ஆம் தேதி பிரதோஷமும், ஏப். 26 ஆம் தேதி சித்ராபௌா்ணமியும் வருகின்றன. எனவே ஏப். 24, 26, 27ஆம் தேதிகளில் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதையும், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையும், கருத்தில் கொண்டு சதுரகிரி கோயிலுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் நடைபெறும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும். எனவே யாரும் சதுரகிரி அடிவாரமான தாணிப்பாறை பகுதிக்கு வர வேண்டாம் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், பக்தா்கள் வருவதை கண்காணிக்க தாணிப்பாறை அடிவாரப் பகுதி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு ,ஆகிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com