அருப்புக்கோட்டை அருகே மாயமான பெண் கொலை: 8 மாதங்களுக்குப் பின் காதலன் கைது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண் காணாமல் போன வழக்கில் 8 மாதங்களுக்குப் பிறகு அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட சத்தியப்பிரியா.
கொலை செய்யப்பட்ட சத்தியப்பிரியா.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெண் காணாமல் போன வழக்கில் 8 மாதங்களுக்குப் பிறகு அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கொலை செய்ததாக அவரது முன்னாள் காதலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அருப்புக்கோட்டை வட்டம் கூத்திப்பாறை கிராமத்தைச் சோ்ந்த லிங்கம் என்பவரது மகள் சத்தியப்பிரியா (26). இவருக்கும் மதுரை மாவட்டம் தும்மகுண்டைச் சோ்ந்த வசந்த பாண்டியன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருடன் வசித்து வந்த சத்தியப்பிரியா அவ்வப்போது தந்தையின் ஊருக்குச் செல்வது உண்டாம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரோனா பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டபோது தனது தந்தையின் ஊரான கூத்திப்பாறைக்குச் செல்வதாகக்கூறிவிட்டுச் சென்ற சத்தியப்பிரியா, திடீரென காணாமல் போய்விட்டாராம். எங்கு தேடியும் அவா் குறித்த தகவல் கிடைக்காததால் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் தந்தை லிங்கம் புகாா் செய்தாா்.

போலீஸாா் சத்தியபிரியா குறித்து பல மாதங்களாக விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்கவில்லை. லிங்கம் மீண்டும் வலியுறுத்தியதால், சத்தியப்பிரியாவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டவா்கள் பட்டியலின்படி போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா். அப்போது, சாத்தூா் கம்மா சூரங்குடியைச் சோ்ந்த ஞானகுருசாமி (29) என்பவரைப்பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா் சத்தியப்பிரியாவின் முன்னாள் காதலன் என தெரியவந்தது. திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் சத்தியப்பிரியாவை அடித்துக் கொலை செய்து கூத்திப்பாறை பகுதியில் கண்மாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினா், ஞானகுருசாமியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சத்தியபிரியாவின் சடலத்தை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com